Thursday 27 November 2014

ஒரு வகையில் பாக்கியவானென்று....


பயணத்திற்கான
முன்னேற்பாடுகளில்
இப்போதெல்லாம்
அம்மாவின் பங்கென்னவோ
பிரார்த்தனைகள் மட்டும் தான்....
மாத்திரைகளை மறக்காமல்
ஒரு டப்பியில் போட்டு நீட்டுவதும்,
கைப்பேசி, உள்ளாடை, ஏ.டி.எம் கார்டு, டாக்குமெண்டுகள் எடுத்தாச்சா?
என்று கேட்பதோடும் நிறைவுறுகிறது
மனைவியின் வழியனுப்புதல்....
தனியறையில் இயங்கிடும் பிள்ளைகளை
தொந்தரவு செய்வதில் தயக்கiம் ---
அவர்கள் உறங்கவில்லை என்ற போதும்....
******** ************************************** *********
நடந்தே தீர்த்தது பாதி,
காத்திருப்பில் கரைந்தது மீதி,
சுகமேதுமின்றி
அப்பாவின் பயணங்கள்
இப்படித்தான் இருந்திருக்கின்றன....
பரபரக்கும் அந்தப் பயணிகள் ரயிலுக்கான காத்திருப்பின் நடுவிலும்
சிறிதே வாய் திறந்து ஒருபுறம் தலை சரிய
சாப்பாட்டுக் கூடையைக் கெட்டியாய்ப் பிடித்தபடி
ஆழ உறங்கிய அப்பாவின் அந்த நாள் உறக்கம்
வாய்க்கவில்லை -- எந்த ஏ. சி அறையிலும் இதுவரை...
ஒரு சிறிய கைத்துண்டு,
தண்ணீர் நிரப்பிய பாட்டில்,
வெயிலுக்கும் மழைக்கும் அனுசரித்து
மோரோ காப்பியோ ஏதோ ஒன்று....
மூன்றடுக்கு கேரியரில் பக்குவச் சமையல்
ரெண்டு வாழைப்பழம்
நிரம்பியதொரு ஒயர் கூடை ---
அப்பாவிடமிருந்து இந்திரன் பறிக்க மறந்ததொரு கவச குண்டலம்.....
ஆறடித்து ஆயாசமாய் ஓயும்
அந்தக் கடிகாரத்தையும்
வாசற்கதவையும்
பயம் கலந்த பார்வையால்
துழாவிய அம்மாவின் கண்கள்
அலுக்காத மாலை நேரக் கவிதைகள்....
************ ************ *************** **************************
இன்று
ஆறு தாண்டி
கடல் கடந்து
மொழியறியாப் பிரதேசத்தில்
கால் ஊன்றி
உப்பு உரைப்பில்லா ஒரு வேளை உணவோடு
அசதியாய்க் கண்மூடி
நினைவுகளால் ஜீவித்திருக்கையில் தெரிகிறது.....
தன் வாழ்நாளில் -
பேன்ட் சட்டையை,
கார்ப் பயணத்தை,
தொலைபேசியை,
விமானத்தை,
மொத்தமாய் ஒரு லட்சத்தை,
இன்ன பிற சொகுசுகளைப்
பார்த்தறியாத அப்பா
ஒரு வகையில் பாக்கியவான் என்று!
எத்தனைக் கொடுத்து வைத்தவர் என்று!

ஒரு வகையில் பாக்கியவானென்று.......
----------------------------------------------------------------- 

பயணத்திற்கான 
முன்னேற்பாடுகளில் 
இப்போதெல்லாம் 
அம்மாவின் பங்கென்னவோ 
பிரார்த்தனைகள் மட்டும் தான்.... 

மாத்திரைகளை மறக்காமல் 
ஒரு டப்பியில் போட்டு நீட்டுவதும், 
கைப்பேசி, உள்ளாடை, ஏ.டி.எம் கார்டு, டாக்குமெண்டுகள்  எடுத்தாச்சா? 
என்று கேட்பதோடும் நிறைவுறுகிறது 
மனைவியின் வழியனுப்புதல்.... 

தனியறையில் இயங்கிடும் பிள்ளைகளை 
தொந்தரவு செய்வதில் தயக்கiம் --- 
அவர்கள் உறங்கவில்லை என்ற போதும்.... 

********           **************************************   *********

நடந்தே தீர்த்தது பாதி, 
காத்திருப்பில் கரைந்தது மீதி, 
சுகமேதுமின்றி 
அப்பாவின் பயணங்கள் 
இப்படித்தான் இருந்திருக்கின்றன....  

பரபரக்கும் அந்தப் பயணிகள் ரயிலுக்கான காத்திருப்பின் நடுவிலும் 
சிறிதே வாய் திறந்து ஒருபுறம் தலை சரிய 
சாப்பாட்டுக் கூடையைக் கெட்டியாய்ப் பிடித்தபடி 
ஆழ உறங்கிய அப்பாவின் அந்த நாள் உறக்கம் 
வாய்க்கவில்லை -- எந்த ஏ. சி அறையிலும் இதுவரை... 

ஒரு சிறிய கைத்துண்டு,
தண்ணீர் நிரப்பிய பாட்டில், 
வெயிலுக்கும் மழைக்கும் அனுசரித்து 
மோரோ காப்பியோ ஏதோ ஒன்று.... 
மூன்றடுக்கு கேரியரில் பக்குவச் சமையல் 
ரெண்டு வாழைப்பழம் 
நிரம்பியதொரு ஒயர் கூடை ---  
அப்பாவிடமிருந்து இந்திரன் பறிக்க மறந்ததொரு கவச குண்டலம்..... 

ஆறடித்து ஆயாசமாய் ஓயும் 
அந்தக் கடிகாரத்தையும் 
வாசற்கதவையும் 
பயம் கலந்த பார்வையால் 
துழாவிய அம்மாவின் கண்கள் 
அலுக்காத மாலை நேரக் கவிதைகள்.... 

************        ************ ***************     **************************

இன்று 
ஆறு தாண்டி 
கடல் கடந்து 
மொழியறியாப் பிரதேசத்தில் 
கால் ஊன்றி 
உப்பு உரைப்பில்லா ஒரு வேளை உணவோடு 
அசதியாய்க் கண்மூடி 
நினைவுகளால் ஜீவித்திருக்கையில் தெரிகிறது..... 

தன் வாழ்நாளில் -
பேன்ட் சட்டையை, 
கார்ப் பயணத்தை, 
தொலைபேசியை, 
விமானத்தை, 
மொத்தமாய் ஒரு லட்சத்தை, 
இன்ன பிற சொகுசுகளைப் 
பார்த்தறியாத அப்பா 
ஒரு வகையில் பாக்கியவான் என்று! 
எத்தனைக் கொடுத்து வைத்தவர் என்று!

நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்

No comments:

Post a Comment