Sunday 12 February 2017

சுழன்றும் ஏர் பின்னது உலகம்?

இந்த இடத்தில் நான் ஒரு வேளை நிறைய வாங்கி கட்டிக் கொள்ளப் போகிறேனோ என்னவோ? இருந்தாலும் என்னோட ஆதங்கத்தைக் கொட்டுறேன்!
(புள்ளிவிவரமெல்லாம் நான் போட்டு உங்களைக் கலவரப்படுத்தாம நேரா விஷயத்துக்கு வரேன்!)


இந்திய பட்ஜெட்டில் அதிக பட்ச ஒதுக்கீடு என்பது ஒன்று இராணுவத்துக்கு! இரெண்டு, விவசாயத்துக்கு! அதன் பிறகு மிச்ச மீதியில், துண்டோ வேட்டியோ திரௌபதையின் புடவையே விழுந்தாலும் அது பற்றிய லட்சியமின்றி தான் மற்ற செக்டார்களுக்கு! இதில் வரும் கடன், வராக் கடன், மான்யங்கள், கடன் தள்ளுபடிகள் என்று எல்லாமும் தானே உண்டு! ஆண்டாண்டு காலமாக எல்லாராலும் boost பண்ணப்படுகிற விவசாயம் ஏன் படு பாதாளத் தோல்வியாக ஒரு உழவு தேசத்தில் இருக்கிறது?
வெறும் இருபதாண்டு காலத்தில் இந்தியர்கள் தங்களுக்கு முற்றிலும் புதிய துறையாக இருக்கும் ஐ.டி. துறையில் நுழைந்து கற்று தேர்ந்து சாதித்து உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்ட முடியும் போது -- பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து ரெத்தத்தில் ஊறிப் போன விவசாயம் இவர்களுக்குக் கைவராதா?
சரி, இன்றைய விவசாயிகள் எத்தனை பேர் updated? Software போட்டு விவசாயம் பண்ண முடியுமா என்று எதிர்க் கேள்வியெல்லாம் வாதத்துக்குத் தான் ருசிக்கும்! நடைமுறையில், மாவட்டம் தோறும் இருக்கும் விவசாயப் பண்ணைகளை எத்தனைப் பேர் பயன் படுத்திக் கொள்கிறார்கள்? புதிதாதக எத்தனையோ ஊடுபயிர்களைப் பற்றியும் பணப்பயிர்களைப் பற்றியும் பருவத்துக்கேற்ற பூச்சிக்கொல்லிகள் பற்றியும் இன்றும் கூட அரசு மீடியாக்களில் அதிகாரிகள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்! யாருக்காக? (மலேசியாவில் என்று நினைக்கிறேன் - நெற்பயிர்களுக்கு ஊடாக மீன்களை வளர்க்கிறார்கள்! ஜப்பானில் எத்தனை ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன? அவர்கள் terrace farming செய்தே தங்களின் தேவைகளை ஓரளவிற்கு நிறைவேற்றிக் கொள்ளவில்லையா?
முப்போகம் இரெண்டு போகம் என்பதெல்லாம் இந்த வறட்சியில சாத்தியமில்லை -- என்று சவுகரியமாக டீக்கடையில் பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டிய ஒரு கட்டாய தருணம் இது! எல்லாவற்றையும் அரசாங்கமே தான் செய்து தர வேண்டும் என்ற அடிப்படை எதிர்பார்ப்பை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்! விவசாயம் இல்லாத நாட்களில் கூலிக்கு வேலை செய்பவர்களும் குறு விவசாயிகளும் பயன் பெற வேண்டும் என்று ஆரம்பிக்கப் பட்டதே நூறு நாள் வேலைத் திட்டம்! இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி முன்னெடுத்துச் சென்றாலே போதும்!! விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்!!
அரசியல் காரணங்களுக்காகவே பூட்டப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் உழவர் சந்தைகள் நிறைய உண்டு!!
இத்தனை மருத்துவக் கல்லூரிகள் இத்தனை பொறியியல் கல்லூரிகள் என்று அவ்வப்போது தேவைப்படும் துறைகளுக்காக நாமும் அரசும் என்னவெல்லாமோ செய்து மெனக்கெடும் போது -- 365 நாட்களும் 3 வேளையும் தவறாது தேவைப் படுகிற உணவுக்கும் அதன் உற்பத்திக்குமான இந்தச் சமூக மனப்பான்மையையும் அக்கறையையும் என்னென்பது?
மேலும் uncertainties என்பது எல்லாத் துறைகளிலும் உண்டு! அரசு வேலையிலும் கூட உண்டு! ESMAவை யாரும் மறக்க முடியாது தானே!! What do we learn from them? And how much are we prepared to encounter these such problems if they occur in future too? டிசம்பர்னா புயல்னும் ஏப்ரல்னா வெயில்னும் பல தலைமுறைகளா பார்த்துப் பழகிய நாம -- இன்னும் அதையே காரணமாக் காமிச்சு யாசகம் கேட்பதும் போராடுறதும் வேதனை! அந்தப் போராட்டத்துலயும் கூட ஒற்றுமை இல்லை என்பது பெருங்கொடுமை!
எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கு! பழைய குளங்களையும் ஏரிகளையும் மீட்பதில் தொடங்கி desalination வரைக்கும்!
 Extra curricular activities listலயாவது தோட்டக்கலைக்கும் விவசாயத்துக்கும் கல்வித்துறை இடம் கொடுக்கணும், முடிஞ்சா கட்டாயமாக்கணும்!
உழவர்களையும் விவசாயிகளையும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் இரக்கத்துக்குரியவர்களாகவும் --- ஏதோ அவர்களைக் காப்பாற்ற வந்த தேவதூதர்களாகவும் அரசியல்வாதிகள் பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்திட்டு -- மான்யத்தையும் இலவசத்தையும் கொடுத்து அவர்களைக் கொச்சைப் படுத்தாமல் -- அவர்களுக்குத் தங்கள் தொழிலை நேர்த்தியாக செய்வதற்கு உதவ வேண்டும்!
சமூகத்தின் பார்வையும் மாற வேண்டும்! ஒரு கலெக்டரை, டாக்டரை, வக்கீலை, ஆசிரியரை, ஏன் ஒரு நடிகரைப் பார்த்துப் புளகாங்கிதம் அடையும் நம்மால் மிக யதார்த்தமாகக் கூட விவசாயிகளிடம் உரையாடவும் உறவாடவும் முடியவில்லையே! தலைகுனிந்து வணங்கி வாழ்த்த வேண்டிய ஒருவரை டம்மிப் பீஸ்களாக மட்டும் தான் மீடியாக்கள் காண்பிக்கின்றன!
மொத்தத்தில் ஒருமித்த சமூகப்பார்வையும் அக்கறையும் இல்லையெனில் -- விவசாயத்தையும் corporate companyகள் கையகப்படுத்தும் நாள் விரைவில் வந்து சேரும்!!

LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment