Keep Quiet
~~~~~~~~~
கொடுக்கத் தெரியாம வரத்தைக் கொடுத்துப்புட்டு, திருடனுக்குத் தேள் கொட்டினாப்புல அந்தக் கடவுள் tight lips-ம் தலைகுப்புறக் கவிழ்ந்தடிச்ச மூடுமா இருக்கிற நேரத்துல படைச்ச ரெண்டு பிரத்யேகப் பிறவிகள் உண்டு...
1) எங்கப்பா
2) எங்க ஶ்ரீதர் -- சாட்சாத் என் கணவர்!!
இதிலென்ன பிரத்யேகம்னு நீங்க ரொம்ப ஆராய்ச்சியில இறங்கினீங்களோ கழுத்தளவு கண்ணீரில மிதக்க ஆரம்பிச்சுடுவீங்க!
மாமனார்க்கும் மருமகப் பிள்ளைக்கும் நிறைய ஒற்றுமை!! Same pinch, same pinchந்னு மாத்தி மாத்தி கிள்ளி தொடையெல்லாம் புண்ணாப் போயி மஞ்சப் பத்து போட வேண்டிய அளவுக்கு... Similarities...
ஆனாலும் என்னை ரொம்பவே சீண்டிப் பார்க்கும் சிமிலாரிட்டீனா அது அவங்க ரெண்டு பேரும் பொத்திப் பொத்தி அடைகாத்துப் போர்த்திக்கிற மவுனம் தான்!! விதவிதமா ரகரகமா மௌனம்!!! ஆமாம், வாயில விரலை விட்டுத் தான் வார்த்தையையே வாங்கணும் ரெண்டு பேர்க்கிட்டேர்ந்தும்!!!
சின்னக் குழந்தைகளை படுக்கப் போட்டு, ரெண்டு பக்கமும் ரெண்டு தலகாணி வைப்பாங்களே, அந்த சைஸ்ல ஒரு புத்தகம்; வாகான நாற்காலி, ஒரு மணிக்கொரு தடவை காஃபி, தண்ணி பழம் இத்யாதி இத்யாதி உபசரணைகள்.... போதும்! எதேஷ்டம்!! அனுக்கிரகம் உண்டாகட்டும்!!
அட, எனக்காக நீ tape recorder-ல், தேர்ந்தெடுத்த பழைய பாடல்களைப் போடுகிறாயே!! கடவுள் அனுக்கிரகங்களாக வர்ஷிக்கட்டும்!!! இதெயெல்லாம் மனசுக்குள் நினைத்தபடி -- (கவனிக்க - அங்கே கூட சொல்லியபடின்னு நான் எழுத முடியாதூதூ..) அப்பா புத்தகத்தின் ஒரு அட்டைக்குள் நுழைந்து மறு அட்டைவழியாக வெளிவரும் தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்திருப்பர்! ட்ரெயின்ல, பஸ்ல, டைனிங் டேபிளில, அப்போ மளிகைக் கடை சாமான்கள் கட்டப்படும் பொட்டல நியூஸ்பேப்பர்களில் என்று எங்கும் எதிலும் எப்போதும் தோண்டித் துருவிப் படிப்பு!!!
இப்போ கொஞ்சம் ட்ரெண்ட் மாறியிருக்கு! செல்போனும் டேபும் அந்த இடத்தைப் பிடித்து கொண்டன!! அடுக்களையிலிருந்து குரல் கொடுக்கும் அம்மாவுக்குப் பதிலாக இங்கே ஹாலில் இன்னமும் தலையசைத்துக் கொண்டிருப்பார்!! மேலிருந்து கீழ் அல்லது இடமிருந்து வலம்!! சுபம்!!!
ஶ்ரீதர் இன்னும் கூட ஒசத்தி; மாடர்ன்! போனில் பேசுகிறவருக்கே இங்கிருந்து தலையசைத்து பதில் சொல்லுவார்! ரெண்டு நிமிஷத்துக்கு மேல போன் பேசுனாலே தெய்வ குத்தம்!! அந்த ரெண்டு நிமிஷத்துலயும் நாலுதரமாவது எதிர் முனையில இருக்கிறவர், "ஹலோ...ஹலோ லோ..லோன்னு" கூப்பிட்டு கன்பாஃர்ம் பண்ணிக்கிட்டே தான் பேசணும்!!! கொடுமை!!
சரி, விஷயத்துக்கு வருவோம்! (இப்ப மனசுலாயிருக்கணுமே எல்லார்க்கும்?! எப்படிப்பட்ட கான்ட்ராஸ்ட் கப்புள்ஸ் நாங்கன்னு!!!)
திருவாரூர் டூ திருச்சி பயணம்! கடைசி நேர முடிவாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்!! Obviously unreserved! Weekend -- so, standing!!! வேறு வழியில்லாமல் லேடீஸ் கோச்சில் பயணம்!! பரமசுகம்னு முடிக்க முடியாதபடி -- மனிதர்கள்!! மனுஷிகள்!!
பிளாட்பாஃரம் தாண்டி வேகமெடுத்த அந்தக் கணத்தில் தான் பார்த்தோம் அவரை! ரயிலை நோக்கி ஷால் ஒரு பக்கமும் பை ஒரு பக்கமுமாக ஓடி வந்து கொண்டிருந்தார்! கார்டு நல்லவர்! ரயில் நின்றது!! ஏறிக் கொண்ட பெண் நான் நீட்டிய வாட்டர் பாட்டிலைக் காலி செய்து தேங்க்ஸ் என்று நீட்டிய அந்த நிமிஷத்தில் துவங்கியது விசாரணை! முதல் கேள்வி எனக்கு: "தெரிஞ்சவங்களா?" நான் கோக்குமாக்காக ஏதும் சொல்லாமல் இல்லை என்று நேரிடையாகச் சொன்னேனோ பிழைத்தேனோ!!
"டிக்கெட் எடுத்தாச்சா?" அந்தப் பெண் அப்போது தான் சுயநினைவுக்கு வந்தது! "ஐயோ இல்லை!"
"அடுத்த ஸ்டேஷன்ல எறங்கிடுங்க! சே..சே... இறங்க வேண்டாம் நீடாமஙலத்துல இறங்கி டிக்கெட் வாங்கிடு! அதெல்லாம் சரிப்படாது; தஞ்சாவூர்ல இறங்கிட்டு டிக்கெட் வாங்கிடுங்க! அனெக்ஸ் கௌண்டர் ஒன்னு இருக்கும் அது ஈஸி! வேணாம்! அதுக்குள்ள ரயில் கிளம்பிட்டுன்னா? தஞ்சாவூர்ல இறங்கிடுங்க.. பின்னாலயே இன்னொரு ட்ரெயின் வரும் திருச்சிக்கு! அதுல வரலாம் ... " கம்பார்ட்மெண்டே ஒன்று கூடி அந்தப் பெண்ணுக்கு ஆலோசனைகளை அள்ளி வீசிக்கொண்டிருக்க அது ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் செல்போனை நோண்டத் துவங்கியது!!!
நீடாமங்கலம்! முன்னேற்றம்!! இது வரை கால் வைக்கவே திண்டாடியது போதாதென்று இப்போது விரல் வைக்கவே இடமில்லாத கஷ்டம்!! தலகாணிக்குப் பஞ்சு திணிக்கிற மாதிரி... இதுல லேடீஸ் கோச் என்று தெரியாமல் ஏறிவிட்டாராக்கும் என்று எல்லாரும் ஒரு ஆணைப் பிடித்து சௌண்டாக எகிற அவரோ ஒரு பெண்ணைக் காட்டி "அதோட லக்கேஜ் வைக்கத் தான வந்தேன்!" என்று பாவமாக சொல்ல... ச்சு.. சு... பெண் புத்தி பேன் புத்தி!!!
ஆமாம் அடுத்தது பேன் பிரச்சனையில் ஒரு வரப்புத் தகராறு!!
"ந்தா, பேனைச் சீவிச்சீவி ஏன் இங்க போடுற?"
"வேற எங்க போடுறது?"
"வைச்சிருக்கேல்ல? டிபன் டப்பி? அதுல போடு! இல்ல உன் வாயில போடு" -அந்தப் பெண் விதிர்விதிர்த்துப் பார்க்க, "நீ தின்னத அது தின்னுச்சுல்ல?" என்று லாஜிக் பேசி ஸ்லோமோஷனில் வெத்தலை போட்டு அஞ்சு நிமிஷத்துக்கொரு முறை ஜன்னல் வழியாக ஸ்பிரே!!!!
அப்பாடா! தஞ்சை!! நாலு பேர் இறங்கி பத்து பேர் ஏற.. "காத்து ப்ளீஸ்னு" இடையில் புகுந்த வாண்டு ஒன்று! "எனக்கு ஜன்னல் சீட்!"என்று இன்னொன்று!! "அது ஜன்னல் சீட் இல்ல ஸ்டேண்ட் " என்று கடித்தபடி அந்த அம்மா ஒரு பிக் ஷாப்பரை வாட்டர் பாட்டில் மாட்டுவதற்கென்று உள்ள கொக்கியில் தம் கட்டித் திணித்து நகர்ந்தார்கள்!! குழந்தைகளைப் பிராக்குப் பார்த்து பொழுது போய்க் கொண்டிருந்தது!! திடீர்னு பொத்தென்று ஒன்று விழ எண்டையர் கம்பார்ட்மெண்டேக் கலவரம்! "முறுக்கு, உருண்டை, மிக்ஸர், குட்டி ஜட்டீஸ், சில்லறைகள், தூக்கு வாளி எல்லாம் தாங்கிய தோளி போற்றி!"ன்னு அப்பவே சரணம் பாடியிருக்கணும்!! "சாரி!"ன்னு ஒத்தை வார்த்தையில படபடப்பா முடிச்சதை ஏத்துக்க முடியாம - பொதேர்னு விழுந்த பிக் ஷாப்பரை வீசி எறிஞ்சு, ஒருமை பன்மை உயர்திணை அஃறிணைனு எந்தப் பாகுபாடும் இல்லாம -- அந்த பிக் ஷாப்பர் அம்மாவுக்கு ஏழெட்டு ஜென்மத்துல காதுல ரெத்தம் வர்றாப்பில -- ஓ, தமிழ் திட்டுவதற்கும் இவ்வளவு வளமான மொழியா???!. தாண்டவம்!!!
அப்பாடா!! ஒரு வழியாகி திருச்சி...
"So, how was the journey?" மறுமுனையில் ஶ்ரீதர் தான்!
காதுகளுக்குள் விரல் விட்டு ஒரு தரம் ஆட்டி கொஞ்சம் ரிலீஃப் ஆகிக்கொண்டு நான் சொன்னேன்,
"I missed you a lot!!!"ங்க என்று!!
ஶ்ரீதருக்குப் புல்லரிச்சிருக்கும்! என் காது செல்லரிச்சது தெரியாமலே...

No comments:
Post a Comment