மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்குத் தான் மெட்டா? என்ற தர்க்கங்களுக்கு மத்தியில், இது நிஜமாகவே சினிமாப் பாட்டு தானா? இல்லை, நமக்காகவே
எழுதப்பட்ட பிரத்யேக கந்தர்வ வாசகங்களின் ஒரு தொகுப்பா என்று நம்மை வியக்க வைக்கின்றன ஒரு சில பாடல்கள். அற்புதமான கவித்துவமோ, அலங்காரமான உவமைகளோ அல்லது விண்ணைத் தாண்டிய கற்பனைகளோ இல்லாத போதும் கூட எப்போதும் சுகமாகவும் அழகாகவும் இருக்கின்றன இந்தப் பாடல் வரிகள்....
எல்லாருக்காகவும், எல்லாக் காலத்துக்கும், எல்லா உறவுகளுக்கும் பொருந்திப் போகிற விஷயங்களுடன் மனவெளியில் நங்கூரமிட்டு நிற்கும் யதார்த்தமான வரிகள்....
ஆசுவாசமும் அமைதியும் வேண்டி அலைகின்ற ஒவ்வொரு இதயத்துக்குமான - நெருக்கமான அந்தப் பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..



No comments:
Post a Comment