Friday, 19 December 2014

ஞாபகக் குதிர்கள்.

விடிவதும்
முடிவதுமாக நகர்ந்து விடுகின்றன
நாட்கள்....





விடுவதாய்
முடிவதாய் இல்லை
ஞாபகங்கள் மட்டும்.

நல்லதோ அல்லதோ
நினைவுகளைச் சுமந்து திரியும் 

ஞாபகக் குதிர்களாய்
நாம்..




அதிசயமாய்
இந்தக் குதிர் மட்டும்
நம் ஆயுள் தேயத் தேய
வளர்ந்து பெருக்கிறது....





பறிமாறிக்கொள்ளவும்
பசியாற்றிக் கொள்ளவும்
ஞாபகங்களே போதுமெனில்
இந்த மண்ணில்
ஒவ்வொரு மனிதனுமே
வள்ளல் தான்!
 




 நன்றி: கூகுள் படங்கள். 

 நன்றி: முகநூல்.

No comments:

Post a Comment