முன்னும் பின்னும்
மூச்சைச் சுமந்தபடி
முந்நூறு குழாய்கள் .
அவசரப் பிரிவில்
சிறையிடப் பட்டிருக்கும்
என் உயிர்.
என் கண்களில்
களைப்பு.
மூடிய விழியிரெண்டிலும்
எமனின் பரிகசிப்பு.
மரண வாடையை
மருந்துப் போர்வைகளால்
மறைக்க முயன்றிடும்
ஒரு பொய்ப் போராட்டம்.
அவசரமாய்
அரைக் கிறுக்கலில் திணிக்கப்பட்ட
பிறிதொரு மருந்துச் சீட்டு;
வற்றி இளைத்திருக்கும் உன் பணப் பையை
மீண்டும் தயக்கமாய்த் தடவுகிறாய் நீ....
மீட்சிக்கு வழி தேடி
இயலாமையில்
அலைபாயும் உன் கண்கள்
என்னைச் சங்கடப் படுத்துகின்றன.
எறிந்து விடு!
யாருக்கு வேண்டும் இத்தனையும்?
"இன்னும் வலிக்குதாம்மா?" -
கேட்டபடி, காலி அமிர்தாஞ்சன பாட்டிலில்
தடவித் தேய்த்த உன் அந்த நாள் பரிவு-
அதை மட்டும் மீட்டு,
மீண்டும் என்னைத் தொடு.
எப்போது தான் புரியும் உனக்கு,
நோயும் நீயே
மருந்தும் நீயே என்று!
நன்றி: கூகுள் படங்கள்.
மூச்சைச் சுமந்தபடி
முந்நூறு குழாய்கள் .
அவசரப் பிரிவில்
சிறையிடப் பட்டிருக்கும்
என் உயிர்.
என் கண்களில்
களைப்பு.
மூடிய விழியிரெண்டிலும்
எமனின் பரிகசிப்பு.
மரண வாடையை
மருந்துப் போர்வைகளால்
மறைக்க முயன்றிடும்
ஒரு பொய்ப் போராட்டம்.
அவசரமாய்
அரைக் கிறுக்கலில் திணிக்கப்பட்ட
பிறிதொரு மருந்துச் சீட்டு;
வற்றி இளைத்திருக்கும் உன் பணப் பையை
மீண்டும் தயக்கமாய்த் தடவுகிறாய் நீ....
மீட்சிக்கு வழி தேடி
இயலாமையில்
அலைபாயும் உன் கண்கள்
என்னைச் சங்கடப் படுத்துகின்றன.
எறிந்து விடு!
யாருக்கு வேண்டும் இத்தனையும்?
"இன்னும் வலிக்குதாம்மா?" -
கேட்டபடி, காலி அமிர்தாஞ்சன பாட்டிலில்
தடவித் தேய்த்த உன் அந்த நாள் பரிவு-
அதை மட்டும் மீட்டு,
மீண்டும் என்னைத் தொடு.
எப்போது தான் புரியும் உனக்கு,
நோயும் நீயே
மருந்தும் நீயே என்று!
நன்றி: கூகுள் படங்கள்.



No comments:
Post a Comment