கொஞ்சம் தாறுமாறாக உடைக்கப் பட்ட ஒரு தேங்காய்.. கரடு முரடு தான்! ஆனாலும் நம் உள்ளங்கையில் சமர்த்துப் பிள்ளையாய் அடங்கி திருப்புகிற பக்கமெல்லாம் திரும்பிப் பூப்பூவா உதிர்ந்து ...ஓடும் கூட இடம் பொருள் ஏவலுக்கேற்ற படி அடுப்பு மூட்டவோ, சாம்பிராணி தூபம் போடவோ பயன்படும்! அப்படித்தானே?
ஆர்வக் கோளாறின் ஆரம்ப அறிகுறி ஏதும் இருப்பின் அந்தக் கொட்டாங்கச்சியை வென்னீரில் ஊறப்போட்டு ஒரு தரம் கழுவி, சர்ஃபில் நனைத்து ஒரு தரம் கழுவி உலகத்தின் மேல் உள்ள ஒட்டு மொத்த கடுப்புகளையும் அந்த ஒற்றைத் தேங்காய் இல்லாத மூடியின் மேல் காண்பித்து... சும்மா பளபளன்னு ரெஃப்ளெக்டர் வைச்சிருக்கிற வழுக்கைத் தலையாட்டம் --- உப்புப் பேப்பர்(பட்டசீல் என்கிறார்கள்) எல்லாம் போட்டு வழுவழுப்பாக்கி... அப்புறம் சுக்காட்டம் மறுபடி காயவைத்து... ஃபெவிகால், எம் -சீல், ஃபேபிரிக் கலர், கலர்ப்பொடி, கோலப்பொடி, மஞ்சள் குங்குமம், கடலைப் பருப்பு, மிளகு இத்யாதின்னு அடுப்பங்கரை சாமனை எல்லாம் இழுத்து போட்டு... தலை ஒரு வேஷம் துணி ஒரு வேஷமா நின்னு -- பொம்மை செய்ய ஆரம்பிச்சு; பொம்மை மாதிரி ஒண்ணை செஞ்சு வைச்சு புறடி வலி பின்னியெடுக்க நிமிரும் போது --- எங்கிருந்தாவது அசரீரி மாதிரி ஒரு குரல் வரும்! (அதானே உலக நடப்பு!)
வந்துதே...
"ஹை, என்னதிது?" -- என்று கண்கள் விரிய கேட்கும் அந்தத் துக்குணூண்டு வாண்டுக்கு --- தேங்காய்ல ஆரம்பிச்சு சுற்றுச் சூழல் மாசுபாடுன்னு குட்டி லெக்சர் அடிக்க மனசு பரபரக்கும்!
"பொம்மை டி செல்லம்!" -- என்று முஸ்தீபாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து -- அந்தக் குட்டீசின் கையில் ரெண்டு பிஸ்கெட்டையும் திணித்து...
"இது எதுல செஞ்சதுன்னு சொல்லு பாப்போம்?"
மவுனம்!
"நீ கரெக்டா சொன்னேன்னா ஆன்ட்டி உனக்கு ஒரு கிஃப்ட் தருவனே!"
மீண்டும் மவுனம்! ஆனால் மாவு மிஷின் வேகத்தில் பிஸ்கெட் மாத்திரம் காலி!
"இது என்னன்னு கரெக்டா கண்டுபிடியேன் பார்ப்போம்!"
இது ஏதுடா சள்ளை என்பது போல் என்னையும் வாசல் கதவையும் மாறிமாறிப் பார்வை!
"உனக்கு இந்த மாதிரி செய்யத் தெரியுமா?"
Rotate 360... மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் ... நீ எப்படின்னாலும் அர்த்தம் பண்ணிக்கோ... I don't care... பத்து விரலும் அதனதன் இடத்தில் தான் இருக்கிறதா இல்லை மியூசிகல் சேர் ஆடப் போயிருக்கிறதா என்று தீவிர ஆராய்ச்சி.
"ஆண்டி, உங்களுக்குக் க்ரீம் பிஸ்கெட் பிடிக்காதா?"
"பிடிக்குமே... உன்னாட்டம் குட்டிப் பொண்ணா இருந்தப்போ, நானும் க்ரீம் பிஸ்கெட் தான் நிறைய சாப்பிடுவேன்!" (சமாளிப்பு!)
"அப்புறம் ஏன் எப்பப்பார்த்தாலும் எனக்கு மாரி பிஸ்கெட்டேத் தரீங்க?"
அடக் கடவுளே. என் கைத் திறனைக் கண்டுகொள்வார் யாருமில்லையா? ஆய கலைகள் அறுபத்து நான்கில் எக்குத்தப்பான ஏதாவது ஒன்றைக் கடாசிவிட்டு இந்த கொப்பரக்கா மாடர்ன் ஆர்ட்டை இதுவரை சேர்க்காதது யார் குற்றம்?
"அடடா, உனக்காக இனிமே வாங்கி வெச்சுட்டாப் போவுது? இவ்வளவு தான?"-- கண்களில் சின்ன மலர்ச்சி!
"ஃப்ரூட்ஸ் சாப்பிடுறியா? ஆப்பிள் நறுக்கித் தரவா?" -- என்னுடைய இந்த மாரி பிஸ்கெட் வன்முறையை மறக்கடிக்கணுமே! பாவிமில்லையா கொழந்தை?
"ஐயோ... நோ... எனக்கு ஆப்...பிளேப் பிடிக்காது!" -- போச்சுடா! ஆனால் என்ன innocence? பழவகைகள் பிடிக்காதென்று தப்பித் தவறிக் கூட ஒரு டாக்டரிடம் உளறக் கூடாதென்று.. நல்ல காலம் உன் பள்ளி இன்னும் சொல்லித் தரவில்லை!
ஒரே நிமிஷம்; என்னிடம் அதற்கும் கூட லெக்சர் உண்டு... அதற்கு முன் நான் ஒரு வாய் தண்ணீர்....
இந்த வாட்டர் கேப்பில் எந்த தெய்வமோ வெள்ளெழுத்துக் கண்ணாடி இல்லாமலே பார்க்க -- ஜன்ம சாபல்யம்! இப்போது அந்த "ஆர்ட் பீஸ்" அந்த வாண்டின் கைகளில்!
"எதுல செஞ்சீங்க ஆன்ட்டி?"
"தேங்காய் இருக்குல்ல... அந்தத் தேங்கா மூடில செஞ்சது?"
"ஓ... நைஸ் ஆன்ட்டி!"
"ஸ்வீட் கேர்ள்!" -- ஒட்டு சதைப் பத்து இல்லாத அதன் கன்னத்தைப் பிடித்து இழுத்துக் கிள்ளினேன்! மகிழ்ச்சி!
இதற்குள், "தட்டுல இட்லி எடுத்து வைச்சிட்டு திரும்பிப் போய் தண்ணி கொண்டு வந்து வைக்கிறதுக்குள்ள.. எங்க வந்திருக்காப் பாருங்க?"-- சின்ன சிரிப்போடு நுழைந்த அந்தக் குட்டிப் பெண்ணின் அம்மா!
முகத்தில் மெல்லிய கலவரம்! அடுத்த நிமிஷம் ஸ்மார்ட் சுதாரிப்பு!
"அம்மா.. இங்கே பாரு.. ஆன்ட்டி அழகாப் பண்ணிருக்காங்க?"
"எங்க..." கையில் வாங்கிப் பார்த்த அவருக்கு ஒன்றும் புரியவில்லை... எனக்கும் தான்! இன்னும் தான் பெயர் வைக்கலையே!
"அடடா, இவகிட்ட ஏங்க கொடுத்தீங்க, 'இந்தப் பேப்பர் வெயிட்டை'??? பாருங்க... பெயிண்ட் காய்றதுக்குள்ள... போதாதக் குறைக்கு நடுவுல இருக்கிற அந்த பொம்மையையும் நசுக்கி வைச்சிருக்கா! ஒண்ணு ஒழுங்கா வைச்சுக்கத் தெரியாது..."
"புஸ்.................ஸ்...................ஸ்" -- என் மனசு தான்! நடுவுல நசுங்கிப் போய் உட்கார்ந்திருந்த அந்தப் பிள்ளையாருக்குத் தான் காது துவாரம் அடைபட்டுப் போயிட்டே.. இவளாலே... எங்க கேட்டிருக்கும்?
"போகட்டும் விடுங்க! நான் சும்மா ஏதோ டைம் பாஸ்க்கு... திட்டாதீங்க.. அதான் இன்னும் செட்டாகலயே... சரி பண்ணிக்கலாம்!" மெல்ல பேச்சு வேறு திசையில் பயணித்து, ஆறிக் கிடக்கும் இட்லியில் அடைக்கலமாக -- கிளம்பினார்கள்!
வாசல் வரை போன வாண்டு, "ஆன்ட்டி, அதக் கண்டிப்பா சரி பண்ணிடுவீங்களா?"
"ஸோ ஸ்வீட்... சரி பண்ணிடலாம்... டோண்ட் வொர்ரி... நீ போய் சமத்தா சாப்பிடு!"
நகர மனமில்லாத அந்தக் குட்டிக் கால்கள் அங்கேயே தயங்கின...
"ஆன்ட்டி, சரி பண்ணோன்ன, எனக்கேத் தருவீங்களா?"
இதைவிடப் பெரிதாய் வேறென்ன வேண்டும் ஒரு ஆம்சூர்... ஸாரி.. அமெச்சூர் கலைக்காரிக்கு!
"ஓ, தரனே! நீயே வைக்சுக்க... "
"ப்ச் எனக்கில்ல..!"
"அப்புறம்? வேற யாருக்கு?"
"எஸ். ப்ரியதர்ஷினிக்கு! அவளுக்கு பர்த்டே.. மண்டே.."
"எஸ். ப்ரியதர்ஷினிதான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்டா?"
"நோ... ஷீ ஈஸ் மை எனிமி! அவளுக்குத் தான் இது!"
"பை ஆன்ட்டி!"
யாரங்கே... யாரங்கே.. யாரப்பா அங்கே... ஒரு மொரடு.. ஒரு வாய்.. நோ... ஒரு பாட்டில் ஐஸ் வாட்டர் ப்ளீஸ்... தலை என்னமோ தானா சுத்துது... 'இனிமே கேப்ப?'ன்னு மைண்ட் வாய்ஸ் கிக்கிக்கிங்குது.. என்னதான் நடக்குது?

No comments:
Post a Comment