- · தினப்படி லிப்ஸ்டிக் போடுபவரா நீங்கள்? உங்களையும் அறியாமல் சில சமயத்தில் பற்களின் மேல் லிப்ஸ்டிக் கறை ஏற்பட்டுவிடுகிறதா? கவலைப் படாதீர்கள்! பற்களின் மேல் கொஞ்சம் வாசலின் கொஞ்சம் தடவிவிட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளுங்கள்... பற்களின் மேல் ஒட்டாமல் தீர்க்கமாக உதடுகளுக்குள் மட்டும் அடங்கிப்போகும் உங்கள் லிப்ஸ்டிக்....
- · அதே போல், ஹேர்டை உபயோகிப்பவர் என்றாலும் காதுகளின் ஓரங்கள், முன் நெற்றி, கழுத்துப் பகுதியிலும் தடவிக் கொண்ட பின்னர் டை போட்டுக் கொண்டால், தலையைத் தவிர பிற இடங்களில் டை படருவதைத் தவிர்க்கலாம்! டை போட்டு முடித்த பின் ஒரு டிஷ்யு பேப்பரையோ துணியையோ கொண்டு சுலபமாக வாசலினை துடைத்து விடலாம்!
- · அவசரத்திற்கு நெருப்பு உண்டாக்க வேண்டுமா? கோவிலில் குலதெய்வ வழிபாடு அல்லது சாம்பிராணி போடுவதற்கு உடனடியாக தணல் உண்டாக்க வேண்டுமா? கவலை வேண்டாம்.... உங்கள் பையில் சின்னதாக ஒரு வேசலின் டப்பாவும் கொஞ்சம் பஞ்சும் இருந்தாலே போதும்! தணலை ஐந்தே நிமிடங்களில் உண்டாக்கி தெய்வவழிபாட்டை திவ்யமாக முடிக்கலாம்... . மண்ணெண்ணெயைத் தேட வேண்டிய அவசியமே இல்லை....
- · நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் அவை சாப்பிடும் பாத்திரங்களைச் சுற்றி எப்ப்போதும் எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.. அவை சமயத்தில் நம் செல்லப் பிராணிகளைக் கடித்து வைக்கவும்கூடும்... அதற்காக நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தவும்முடியாது... சாப்பிடும் பாத்திரம் ஆயிற்றே! கையில் எடுங்கள் வாசலினை.. கொஞ்சமே கொஞ்சம், உங்கள் செல்லங்களின் சாப்பாட்டுப் பாத்திரங்களின் அடிப்பாகத்தில் தடவி வையுங்கள்.... எறும்புகள் அண்டவே அண்டாது!
- · சைக்கிள் செயின், கடைகளின் ஷட்டர்கள், இறுகிப் போயிருக்கும் நட்டு போல்டுகள், ஸ்க்ரூக்கள், மற்றும் கிரீஸ் பயன்படுத்த வேண்டிய சூழல்களில் வாசலினை அதற்கு மாற்றாக தாராளமாகப் பயன்படுத்தலாம். கருப்பு கிரீஸ் போல் கறையும் ஏற்படாது!
- · பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்களை பளிச்சிட வைக்க வேண்டுமா? புளி எல்லாம் போட்டுத் துலக்க நேரமில்லையா? கவலை வேண்டாம்! அதான் வாசலின் இருக்கே! இதே போல் வீட்டில் அலங்காரத்திற்கு உள்ள பீங்கான் சிலைகள், கற்சிலைகள் ஆகியவற்றையும் பளிச்சிட வைக்கலாம்...
- · லெதர் செருப்புகள், ஷூக்கள், மனிபர்சுகள், சோபா செட்டுகள் போன்றவற்றுக்கும் வாசலினைக் கொண்டே துடைத்துப் பாருங்கள்... பளபளவென்று புதிது போல் மின்னுவது மட்டுமின்றி, தண்ணீரினால் பாதிக்கப் படாமலும் இருக்கும்! மேலும் மொடமொடவென்று பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பழைய கைப்பைகள், செருப்புகளில் கொஞ்சம் தாராளமாகவே தடவி இரண்டு நாட்கள் விட்டு விடுங்கள்.. அவைமிக வணக்கமாக பயன்படுத்தக் கூடிய அளவிற்கு நெகிழும் தன்மையை அடைந்திருக்கும்!
- · பயன்படுத்தாத ஜிப்புகள் இறுக்கமாக உள்ளனவா? அவற்றின் மேலும் கூட வாசலினைத் தடவி இழுங்கள்... சுலபமாக பயன் படுத்தலாம்.... இதே போல் இறுகிப் போயிருக்கும் தாழ்ப்பாள், பீரோவின் கைப்பிடி ஆகியவைக்கும் கூட வாசலின் சமய சஞ்சீவியாகத் துணை வரும்...
- · வருஷக்கணக்கில் போட்டிருந்த மோதிரத்தை விரலை விட்டு கழட்ட முடியவில்லையா? மெட்டியும் அதே போலா? எடுங்கள் வாசலினை.... வழுக்கிக் கொண்டு வலி ஏதும் சமர்த்தாய் இல்லாமல் வெளியே வரும், மோதிரமும் மெட்டியும்!
- · சின்ன வெட்டுக் காயங்கள், முதல் மற்றும் இரெண்டாம் ரகத் தீப்புண்கள் ஆகியவற்றுக்கு வாசலின் தடவினால் சீக்கிரமே குணம் தெரியும்! மென்மேலும் இன்பெக்ஷன் ஆகாமலும் தவிர்க்கலாம்!
- · தேன், சர்க்கரை கெச்சப் பாட்டில்களை எப்போதும் திறக்கக் கஷடப்படுறீர்களா? அடுத்தமுறை மூடுவதற்கு முன் ஒரு துளியளவு வாசலினை மூடியின் வரம்புகளில் தடவுங்கள்... நோ சிக்கல் இனிமேல்..
- · பனிக்காலங்களில் கைகளில், பாதங்களில் வாசலினைத் தடவி வந்தால் சருமம் ஒரேயடியாக வறண்டு போவதைத் தவிர்க்கலாம்!
நன்றி: கூகுள் படங்கள்
நன்றி: இணையம்












No comments:
Post a Comment