Wednesday, 23 September 2015

துளி போதும்...


துளி இலைப்பனி போதும்
சூரியனையும் பிரதி எடுத்திட.....
துளி ஈரம் போதும்
பட்ட மரமும் தழைக்க....
துளி காற்று போதும்
உயிர் சுவாசம் மீட்டுக் கொண்டு வர...


துளி நேசம் போதும்
வாழ்வை வளமாக்க!
துளி நெருப்பு போதும்
திசையெங்கும் வெந்து தணித்திட...
துளி பொறாமை போதும்
வாழ்வனைத்தையும் ரணமாக்கிக் கொள்ள.... 

நன்றி: கூகுள் படங்கள்
நன்றி: முக நூல்

No comments:

Post a Comment