வீட்டுப் பூனை
----------------------
----------------------
கிண்ணம் நிறைய பாலும் சோறும்
துரத்தி விளையாட பட்டாம் பூச்சிகளும்
விரட்டிப் பிடிக்க எலிகளும்
அவ்வப்போது அணைவாக படரும்
எஜமானரின் ஒரு ஸ்பரிசமும்
இருக்கும் பட்சத்தில் –
ஒரு வீட்டுப் பூனைக்குட்டியின் உலகம் என்னவாயிருக்கும்?
சந்தோஷமும் தூக்கமும் விளையாட்டுமன்றி?
பந்தெனச் சுருண்டு கிடப்பினும்
தூரத்து நாய்குரைப்பின்
சப்தத்தின் பக்கம் காது விடைத்து கவனம் கூர்க்கும்
அந்த க்ஷண நேரத்தில்
விருட்டென வெளிக்கிளம்பி நீண்டிடும் கூர் நகங்கள்
சொல்லாமல் சொல்கின்றன ---
பூனைக்குட்டிகளின்
போராட்டமான இருத்தலை, பயம் கவ்விய கனவுகளை...
நிம்மதியற்ற உறக்கத்தை....
அதன் மனமேறி ஊறும்
ஆதிகால பயங்களின் மிச்சத்தை
கானகக்கடும் பகை தலைமுறைகளிலும்
தொடரும் நிதர்சனத்தை....
தூரத்து நாய்குரைப்பின்
சப்தத்தின் பக்கம் காது விடைத்து கவனம் கூர்க்கும்
அந்த க்ஷண நேரத்தில்
விருட்டென வெளிக்கிளம்பி நீண்டிடும் கூர் நகங்கள்
சொல்லாமல் சொல்கின்றன ---
பூனைக்குட்டிகளின்
போராட்டமான இருத்தலை, பயம் கவ்விய கனவுகளை...
நிம்மதியற்ற உறக்கத்தை....
அதன் மனமேறி ஊறும்
ஆதிகால பயங்களின் மிச்சத்தை
கானகக்கடும் பகை தலைமுறைகளிலும்
தொடரும் நிதர்சனத்தை....
நன்றி : கூகுள் படங்கள்.
நன்றி: முக நூல்.


No comments:
Post a Comment