Saturday, 20 June 2015

ஒரு கண்ணீர்த் திவிலையின் உள்ளீடென்பது ....



ஒரு கண்ணீர்த் திவிலையின்
உள்ளீடென்பது
ஒரு வாழ்க்கையாகவும்
இருக்கக் கூடும்....


அர்த்தங்கள் புலப்படாத
தருணங்களில்
வழிகின்ற நீரில்
கரைந்து கசிந்த படி இருக்கலாம்
பிரிவின் வலியும்
இழப்பின் எதிரொலியும்


ஏமாற்றத்தின் வடிகாலாகவும்
எதிர்ப்பின் மழுங்கிய வெளிப்பாடாகவும்
இருக்கக் கூடும் இரு கன்னங்களிலும்
கோடு கிழிக்கும் மனதின் வெப்பம்..

மனதில் தளும்பியாடும்
சோகங்கள் உள்ளவன்
சட்டென்று
யாருக்காகவும் அழத் துணிகிறான்....


நிமிஷமாய்
சொர்க்கம் படைக்கும்
வல்லமை உள்ளவனோ
நிவேதனமாய்க் கண்ணீர் ஒன்றையே கேட்கிறான்!

நன்றி: கூகுள் படங்கள்

No comments:

Post a Comment