யுகங்களைக் கடந்த போதும் கூட
மறுபடி மறுபடி பேசப்படுவதால் தான்
அவை மரிக்கமலிருக்கின்றன போலும்
என்று என் சிறுவயதில் எண்ணியிருந்தேன்...
இல்லை!...
மனம்தோறும் மனம்தோறும்
மறுபிறவி எடுக்கும்
சகுனிகள் உள்ள வரை
சாவதெங்கே சந்தர்ப்பவாதம்?
மனம் முழுக்க
ஓட்டடை படர்ந்து கிடக்கின்றன
மந்தரையின் சூட்சமங்கள்...
அறியாமல்,
முடிவின்றி
மனக்கதவுகளை தட்டித் தட்டிச் சலிக்கிறோம்
புற்றுப் பாம்பின் சட்டைக்குக் காத்திருப்பது போல்
நாமும்....
திறக்கபடாமலே இருக்கின்ற கதவுகளை
பெருமூச்சுகளால் புறம்தள்ளிவிடலாம்...
சங்கடமில்லை...
திறந்து வெளிப்படுவதெல்லாம் தான்...
இயக்கி நடிக்கின்றன
இன்னொரு இதிகாசத்தை..
படங்கள் உதவி: கூகுள்.

No comments:
Post a Comment