கனவு முழுவதும்
ஒரு மஞ்சள் பையைக்
கையில் பிடித்தபடி
தேடிச் சேகரித்துக் கொண்டிருந்தேன்...
உன் வார்த்தைகளை,
உன் உள்முகம் பிரதியெடுத்த
எனக்கான
பிரத்யேகப் பிரயோகங்களை...
நீ உதிர்த்த வேகத்திற்கேற்ப
அவை
இறகுகளாகவும், சருகுகளாகவும்
என் பாதையெங்கும் சிதறிக் கிடக்கின்றன!
சருகுகளை எறிந்துவிட்டு
இறகுகளால் ஆடை செய்யும் ஆசை வந்தது!
எண்ணிக்கை போதாததால்
இறகுகள் இன்னும்
நெய்யப் படாமலே இருக்கின்றன...
தினம் கணக்கின்றி உதிர்ந்து விடும்
சருகுகளின் சலசலப்போ
தாள முடியவில்லை...
இறகாடையை விடிவதற்குள்
நெய்திட வேண்டிய கட்டாயம்
எனக்கு...
நீயோ -
ஒன்று -
சிதறிய சருகுகளை
குளிருக்கு இதமாய்
எரியூட்டப் பணித்து
உறங்கித் தீர்க்கிறாய்...
அல்லது -
மீண்டும் உதிர்த்துப் போகிறாய்
வெறும் உப்புச் சப்பிலாத
வார்த்தைகளை....
வெறும் சருகுகளை...
படங்கள் உதவி: கூகுள்.

No comments:
Post a Comment