வெறும் பூக்களையும் தேனையும்
மட்டுமே நேசித்து வருபவன்
நீ எனில்
இப்போதே திரும்பி விடு
தயவு செய்து!
கல்லும் மண்ணும்
மலையும் மடுவும்
நன்றும் தீதும்
பாம்பும் பசுவும்
நினைவும் கனவுமான
எல்லாமுமாக
நான் --- காடென!
கடலை வெறுப்பவன்
முத்துக்கு யாசிப்பது போல்....
தயவு செய்து நீயும்
கையேந்தி விடாதே!
நல்லதற்காக மட்டும்!
வெள்ளை மட்டுமே
நிறமென்று யார் சொன்னது?
கருப்பின் இருட்டில்லையேல்
சூரியனின் வெளிச்சப் புயலில்
முன்னமே சிதைவுற்றுப் போயிருக்கும் பூமி!
காட்டைத் திருத்தி
பூக்கள் சமைக்க
நான் அழைக்கவில்லை....
வந்தமர்ந்து இளைப்பாறி
ரசனை கூட்டி
என் இயல்பைப் பதமாக நீவி விடு!
அது போதும்! நம் வாழ்க்கைக்கு!
நன்றி: கூகுள் படங்கள்.





No comments:
Post a Comment