Wednesday, 26 November 2014

அந்தி.





திரண்டு பெய்யும்
பெருமழையின்

இரண்டு துளிகளுக்கு மத்தியில் 
கவனமாய்ப் பயணிக்கிறது
இதமான கணப்பிற்கான
என் வேட்கை....

மலரும் இதழ்களை
மௌன சாட்சியாய்
பார்த்து சந்தோஷித்து
தன் கடைசி மூச்சோடு
பூவாசத்தை திரட்டிப் பருகுகிறது சருகு....

ஊரடங்கிய இராத்திரியில்,
தன் இடத்தை
மூன்று முறை சுற்றி வந்து
காற்றுத் திசைக்குத் தன் மூக்கைத் திருப்பும் நாய்
எப்படியோ மோப்பம் பிடிக்கிறது
மரண வாசத்தை......  



உன் சொச்ச வாழ்க்கைக்கான
என் கடைசி வாக்கியத்தை
சேகரம் பண்ணி கவனமாய் உருப்போடுகிறது என் மனம்....
அந்திப் பொழுதில்
திசை மறந்த பறவையொன்றின் கதறலாய்.....

பாவனையாகவாவது கேள்.....
நிழலை மட்டுமாவது அனுப்பு......

என் அந்திகளின் ஆசுவாசமே
உன் வருகைத் தென்றல்கள் தானே....


நன்றி: கூகுள் படங்கள்

No comments:

Post a Comment