கற்றுக் கொடுக்கும் பள்ளிகள்
மறைத்து வைத்தும்
மறந்து வைத்தும்
தொலைக்கின்றன
மனதைப் படிக்கிற வித்தையை மட்டும்!
மிக விழைந்து நமக்குத் தீமையைச் செய்யும் ஒருவரை நாம் கண்ணியமாகவும் பெருந்தன்மையாகவும் நடத்தினாலும், காலம் ஒருபோதும் சும்மா இருப்பதில்லை. அந்த நபர் வட்டியும் முதலுமாய் சிறுமைபட்டு நிற்பதை ஏதேனும் ஒரு முறையாவது நம் கண்களில் காட்டிவிட்டே ஓய்கிறது.
--- காலம் ஒரு கணக்குப் பிள்ளை.
ஒரு பெண்ணை நேருக்கு நேர் திறமையாலும் நேர்மையாலும் எதிர்கொள்ள முடியாத ஒரு ஆண் செய்யும் உடனடி வேலை அவளுடைய நடத்தையைக் குறித்தக் கேள்விகளை எழுப்பி அவதூறு பரப்புவது தான்.
---- மிகக் கேவலமான மனுஷ வக்கிரம்!
தான் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசுக்கும் பொதுவில் கணக்குக் காட்டக் கூடிய தைரியமுள்ள ஒருவன் கர்வமுள்ளவனாயிருப்பதில் தவறேதும் இல்லை.
நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்.



No comments:
Post a Comment