ஓட்டைச் சல்லடை என
வெட்கமின்றி வானம் காட்டிடும் கூரை....
அதனூடே --
ஈரச் சிறகுகளின் பாரம் நொந்தபடி
அலறி அலையும்
அகாலப் பறவையொன்று....
வெட்கமின்றி வானம் காட்டிடும் கூரை....
அதனூடே --
ஈரச் சிறகுகளின் பாரம் நொந்தபடி
அலறி அலையும்
அகாலப் பறவையொன்று....
சாக்குப் போர்த்தி
ஒண்டிக் கிடக்கும் பிள்ளைகளைப் போல --
அதன் கூட்டிலும் இருக்கக் கூடும்
நிராதரவின் மற்றொரு குழந்தை!
நன்றி: கூகுள் படங்கள்.
ஒண்டிக் கிடக்கும் பிள்ளைகளைப் போல --
அதன் கூட்டிலும் இருக்கக் கூடும்
நிராதரவின் மற்றொரு குழந்தை!
நன்றி: கூகுள் படங்கள்.

No comments:
Post a Comment