சில ஆமைக் குஞ்சுகளும் அநாமதேயக் கனவுகளும்
-------------------------------------------------------------------------------------
அலைகடலில்
மேலும் கீழுமாய்
விழுவதும் எழுவதுமாய் நிலா.
ஊரடங்கிய பின்னும்
உறங்காதிருக்கும் மனமெனவே
கடற்கரை...
என்றோ வித்திட்டு,
தன் முட்டைகளை மறந்து
இன்னொரு இரைக்காகவும்
இன்னொரு இணைக்காகவும்
இந்நேரம் நீந்திச் சலித்திருக்கலாம் -
அடியாழத்தில் அந்தத் தாய் ஆமை...
கடல் மணலின் கதகதப்பில்
ஓட்டைத் திறந்து, மண்ணைப் பிளந்து
ஒன்றின் மீது மற்றொன்று ஏறிச் சவாரி செய்து
ஓட்டமும் நடையுமாக விரையும்
வாழ்வறியாப் பிஞ்சுகளை
விட்டு வைப்பதில்லை கடற்காகங்களும் மனிதர்களும்...
தூரத்துக் கடலையும்
அதிலாடும் அலையையும்
ஆழத்தில் அலைகின்ற தாயையும்
ஒரு கணத்தில்
ஏக்கமாய் நினைத்துப் பார்த்து --
ஒரு விடியலைக் கூட தரிசிக்காமலும்
ஒரு சூரியக் கதிரைக் கூட ஸ்பரிசிக்காமலும்
ஒரு திவிலை உப்புநீரின் சுவையறியாமலும்
மறுப்பேதுமின்றி -
அநாதைகளாக இரையாகிப் போகின்றன
அந்த ஆமைக் குஞ்சுகளும்....
அவை போன்றே -
நம்முடைய கனவுகளும்....
நிலவு சாட்சியாக...!
நன்றி: கூகுள் படங்கள்.
-------------------------------------------------------------------------------------
அலைகடலில்
மேலும் கீழுமாய்
விழுவதும் எழுவதுமாய் நிலா.
ஊரடங்கிய பின்னும்
உறங்காதிருக்கும் மனமெனவே
கடற்கரை...
என்றோ வித்திட்டு,
தன் முட்டைகளை மறந்து
இன்னொரு இரைக்காகவும்
இன்னொரு இணைக்காகவும்
இந்நேரம் நீந்திச் சலித்திருக்கலாம் -
அடியாழத்தில் அந்தத் தாய் ஆமை...
கடல் மணலின் கதகதப்பில்
ஓட்டைத் திறந்து, மண்ணைப் பிளந்து
ஒன்றின் மீது மற்றொன்று ஏறிச் சவாரி செய்து
ஓட்டமும் நடையுமாக விரையும்
வாழ்வறியாப் பிஞ்சுகளை
விட்டு வைப்பதில்லை கடற்காகங்களும் மனிதர்களும்...
தூரத்துக் கடலையும்
அதிலாடும் அலையையும்
ஆழத்தில் அலைகின்ற தாயையும்
ஒரு கணத்தில்
ஏக்கமாய் நினைத்துப் பார்த்து --
ஒரு விடியலைக் கூட தரிசிக்காமலும்
ஒரு சூரியக் கதிரைக் கூட ஸ்பரிசிக்காமலும்
ஒரு திவிலை உப்புநீரின் சுவையறியாமலும்
மறுப்பேதுமின்றி -
அநாதைகளாக இரையாகிப் போகின்றன
அந்த ஆமைக் குஞ்சுகளும்....
அவை போன்றே -
நம்முடைய கனவுகளும்....
நிலவு சாட்சியாக...!
நன்றி: கூகுள் படங்கள்.




No comments:
Post a Comment