இஸ்த்திரி மடிப்புக் கலையாத உடுப்பு, அழுக்கையும் அலுப்பையும் ஒரு சேரப் பூசியிருக்கும் முகம்;
தோள்ப் பட்டையில் தொங்கும் பெரிய பை... இடம், பொருள், ஏவல் ஏதுமின்றி எப்போதும் சிணுங்கவும் அதிரவுமாயிருக்கும் கைப்பேசி....

காலை ஒன்பது மணிக்குத் துவங்கும் வகைதொகையற்ற காத்திருப்பு. பல நேரங்களில் மற்றவர்களின் எரிச்சல் பார்வைகளையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.... அவர்கள் மத்தியில் உட்காரப் பிடிக்காமல் நின்றும் நடந்தும் செல்போனை நோண்டியும் நேரத்தைக் கடத்தி - கொன்று உள்ளே சென்றால் தான் பெருமாள் தரிசனம்! அதுவும் கூட ஜருகண்டி....ஜருகண்டி....தான்....
கொடுக்கப் படும் ஐந்து நிமிட அவகாசத்துக்குள் --- சர்க்கஸ் வித்தைகாரன் போல் வணக்கம் போட்டு, பையைத் திறந்து துழாவி கத்தையாக மாத்திரைகளையும் ரிமைண்டர்களையும் எடுத்து வைத்து அந்த டாக்டராகப் பட்டவர், கைப்பேசியிலோ, காப்பியிலோ, லாப் டாப்பிலோ மும்முரமாக இருக்கும் அந்த நேரத்தில் அவர் மனதில் ஆழ உழுது.... நீங்கள் எங்க மருந்தை எழுதுங்க போதும், நாங்க வானத்தையே வளைச்சுக் கொண்டு வந்து உங்க மருத்துவமனை வாசலில் வைச்சிடுவோம் என்று ஆசை காட்டி பேரம் பேசி படிய வைத்து.... ஒரு வழியாக பவ்யமான நன்றி பாராட்டி வெளியேறும் அந்த நிமிடத்து நிம்மதியையும் மற்ற நோயாளிகளின் காத்திருப்பு அவஸ்தை குதறத் தயாராக இருக்கும்.... தர்மசங்கடமாய்ச சிரித்து வாசலில் நிற்கும் அடுத்த நோயாளிக்கு வழிவிட்டு, கால் தூக்கி நின்றாடி ஷூ மாட்டி..... அடுத்த ஒட்டம்.... அடுத்த டாக்டர்; அடுத்த காத்திருப்பு, அடுத்த வியாபாரம், பேரம்....
இப்பேர்ப்பட்ட வேலை நிரந்தரமானதா என்றால் அதுவும் இல்லை.. கொஞ்சம் பெரிய கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் பாடு பரவாயில்லை.. நாகரீகமாக நடத்துவார்கள்; சலுகைகள் கொடுப்பார்கள்!
'காப்பிக் கடையைப் போல மருந்துக் கடையையும் நடத்திடலாம்; இதென்ன பெரிய கம்ப சித்திரமா?' என்ற உச்ச பட்சமான நம்பிக்கையுடன் கூடிய முதலாளிகள் தான் இன்று நிறைய...அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள் படும் அலைச்சலும் அவதியும் சொல்லில் அடங்காதது.
புல்லுக் கட்டைக் கண்ணெதிரே ஆட்டிக் காண்பிப்பதால் ஆசை மேலிட ஓடும் வேகக் குதிரைகள் போலத் தான் இவர்களும்.. புள்ளி விபரங்கள் துரத்தத் துரத்த பின் மண்டையில் கால்கள் தெறிக்க ஓட்டமெடுத்து வியாபாரம் பேசும் சாவிக் கொடுக்கப் பட்ட பொம்மைகள்...

கண்டுணர்ந்தது தானே... இதிலென்ன புதிதாய் என்கிறீர்களா?
பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரம் ஏறத்தானே வேணும்னு தர்க்கம் பண்ணுகிறீர்களா? எல்லாம் சரிதான்!..
ஆனாலும் ஒரு வேண்டுகோள் -- அடுத்த முறை எந்த மருத்துவ மனையிலாவது உங்களோடு சேர்ந்து அவர்களும் காத்திருக்க நேர்ந்தால் -- எதிரே இருக்கும் அவரை எதிரியாய்ப் பார்க்காதீர்கள்.... அவர்கள் இரெண்டொரு நிமிடங்கள் கூடுதலாக பேசிவிட்டு மருத்துவரின் அறையை விட்டு வெளியேறினால் அவர்கள் மேல் கோபம் காட்டாதீர்கள்... எரிச்சலை உமிழாதீர்கள்...
ஒரு ஒட்டடைக் குச்சி விற்பவரை - மாசக் கடைசியில் விலையுயர்ந்த கரடி பொம்மையை உங்கள் குழந்தையின் தலையில் கட்டப் பார்க்கும் ஒரு பொம்மைக்காரனைப் பார்ப்பது போல் இவரையும் பார்க்காதீர்கள்.
நீங்கள் நினைப்பது போன்றே அவர்கள் உங்கள் நேரத்தை திருடுகிறவராக இருக்கட்டும்.. தேர்ந்த வியாபாரியாக இருக்கட்டும்... போதிய, முறையான ஆங்கில அறிவோ, பயிற்சியோ இல்லாதவராக 'கடனே என்று' பையை மாட்டிக் கொண்டு சுற்றி அலையும் ஒரு சராசரி இந்தியனாக இருந்துவிட்டுப் போகட்டும்....
ஆனாலும் அவரை மதியுங்கள்... உங்களுக்கு அவசரம் இல்லையெனில் அவரின் காத்திருப்புக்கும் மதிப்புக் கொடுங்கள்...
ஞாபகம் வையுங்கள்.... இந்தப் பரந்த தேசத்தின், ஏதோ ஒரு மூலையில் - எங்கோ ஒரு மருத்துவர் - யாரோ ஒரு நோயாளியை - ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத மெடிக்கல் ரெப் அறிமுகப் படுத்திய புதிய மருந்தொன்றைக் கொண்டு குணப்படுத்தியிருக்கக் கூடும்.... பிழைக்க வைத்திருக்கக் கூடும்... நிச்சயமாய்....
நன்றி: கூகுள் படங்கள்

No comments:
Post a Comment