Thursday, 27 November 2014

நிலைபெறும் நிலையாமை...



அடுத்த நொடி,

அடுத்த நிமிஷம்,
அடுத்த ஒரு மணி நேரம்,
அடுத்த வாரம், மாதம், வருடம்,
நீங்கள் எப்படி இருப்பீர்கள்?
யோசித்ததுண்டா?"
-- சத்தமாய்க் கேள்வி எழுப்பிய பேச்சாளரை
வெட்கமாய்ப் பார்த்தோம்.

"பத்து நிமிட அவகாசம்.
ஒன்று திரட்டி உங்கள் கனவுகளைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்! இன்றாவது!"
நகர்ந்தார். 




தயக்கமும் கூச்சமுமாய்
தாள்களில் பதில்கள் கோர்த்துக் கா.....த்....திருந்தோம் ---
பேச்சாளரின்
கடிகார முட்களுக்குப் பெவிகால் தடவியவனைச்
சன்னமாய்ச் சபித்தபடி!

பதறி ஓடிவந்த கேன்டீன் அண்ணன் சொன்னார்,
"இங்க பேசிட்டிருந்தாரில்ல...
அவருக்கு நெஞ்சு வலியாம்!
108-ல கொண்டு போயிருக்காங்க!"




பிரமை பிடித்தவர்களாய்க் கலைந்தோம்.
எங்கள் பதில்களைக் குறித்த தயக்கங்கள்
எப்போதோ கழன்று போயிருக்க,
மனம் முழுக்க வியாபிக்கத் தொடங்குகின்றன:
அந்தக் கேள்வியைக் குறித்த சந்தேகங்கள்...
 


நன்றி: கூகுள் படங்கள் 

நன்றி: முக நூல். 

No comments:

Post a Comment