To
Hon. John Michael D'Cunha,
மறுபடியும், மறுபடியும் உங்கள் மேலான மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது மிஸ்டர். குன்ஹா....
சுய கௌரவத்தையும் நீதியின் மாண்பையும் இன்று உங்களுள் ஒருவரே இத்தனைக் கீழ்மையாக விலைபேசியது கண்டதும், அவர் மேல் வரும் கோபத்தை விட நூறு மடங்கு மரியாதை உங்கள் நேர்மையின் மீது ஏற்படுகிறது....
ஆம், நீதிதேவதையின் முதுகெலும்பில் ஒரு நிமிர்வு இருந்தது --- நீங்கள் அருகிருந்த போது.... உங்களுக்குப் பேரம் பேச நேரமில்லை.... ரெண்டாவது நபரை உங்கள் அறையில் அனுமதிக்க ஒப்பவில்லை... தொள்ளாயிரம் பக்கங்களையும் தனியொருவராக உங்கள் லேப்டாப்பில் தட்டச்சு செய்தீர்கள் -- மூன்றடுக்குப் பாதுகாப்பு வளையத்தை கோர்ட் வளாகத்திற்கென்று ஏற்படுத்திய நீங்கள் -- தீர்ப்பளித்த பின், உங்கள் சொந்த ஊருக்கு எவ்வித சிறப்புப் பாதுகாப்புமின்றி மிகத்தைரியமாக உங்கள் குடும்பத்துடன் சென்றதாய் செய்திகள் சொல்லின.... நாங்கள் மகிழ்ந்தோம்! கூத்தாடினோம்!
சாமாநியனின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் கதவுகள் உங்களைப் போன்ற சிலரால் தான் இன்னும் திறந்தே இருக்கின்றன என்று கண்டுகொண்டோம்.... Even though the justice was delayed but it was never denied... காலம் ஒருபோதும் தவறு செய்பவர்களை மன்னிப்பதில்லை.... மறப்பதும் இல்லை.... சரியான தருணத்தில், சரியான மனிதர்களின் துணையோடு, சரியான படிப்பினைகளை அது வழங்கியபடியே தான் இருக்கிறது என்று உங்கள் தீர்ப்பின் மூலம் தான் நாங்கள் எங்கள் நம்பிக்கைகளை உருவேற்றிக் கொண்டோம்.... இப்போதோ, தளர்ந்து நிற்கிறோம்.... மிக மோசமாக....
உங்கள் தீர்ப்பு நீதியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது... இன்று பணமும் அதிகாரமும் அச்சுறுத்தலும் அந்தக் கோட்டையின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துக் கடலில் எறிகிறது.... பிரமை பிடித்தவர்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்... எங்களிடம் பணம் இல்லை, அதிகாரம் இல்லை, ஆள் பலம் இல்லை... ஆனால் நம்பிக்கை இருந்தது... நேற்று முதல் அதுவும் கூட கரைந்து போகத் துவங்கியுள்ளது....
ஆனபோதிலும், உங்கள் மேலுள்ள மரியாதையின் உயரம் கணந்தோறும் கணந்தோறும் அதிகரிப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம்.... மிகச் சுயநலமோடு உங்களிடம் ஒரு வேண்டுகோளை இந்நேரத்தில் வைக்கிறோம்!
இதுவரை உங்கள் தீர்ப்புக்கு மறு தீர்ப்பு இல்லை என்ற ஒரு பெருமை இருந்ததையும் - எந்த நியாயமும் இன்றி அது தகர்ந்ததையும் -- ஒரு போதும் நீங்கள் பொருட்படுத்தாதீர்கள்! தூர விலகி விரக்தியாக, அமைதியாய் வேடிக்கை பார்க்காதீர்கள்.... பணியிலிருக்கும் சொச்ச காலத்திலும் நீதியின் மிச்சங்களைக் காப்பாற்றி இந்தச் சாமாநியர்களைக் கரையேற்றுங்கள்....
முதலில், இந்த வழக்கு குறித்த எல்லாப் பொது விவாதங்களிலும் உண்மையின் ஓங்கிய ஒற்றைக் குரலாக நீங்கள் இருக்க வேண்டும் என்பது எங்களின் ஒருமித்த அவா...
அதன் பின், முடிந்தால் இந்திய சட்டங்களை, அதன் ஓட்டைகளை, அதன் அவலட்சணங்களை எளிய முறையில் எங்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்....
ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்று அரசு விழாக்களின் அலங்கார பொம்மையாக - இன்னொரு ரப்பர் ஸ்டாம்ப் மனிதராக உங்களை ஒருபோதும் சத்தியமாக எங்களால் கற்பனை செய்ய இயலவில்லை.... தயக்கமின்றி நீதியை முன்னெடுத்துச் செல்வீர்களா மிஸ்டர் குன்ஹா?

No comments:
Post a Comment