அலையும் கேலிகளையும் கோபங்களையும்
நான் அறிந்தே இருக்கிறேன்!
வெறும் பயணியாய் மட்டுமே
என்னைப் பார்ப்பவர்களுக்கு
பாதையின் அழகுகளைக்
கொண்டாடத் தெரியாத
பேதையென்றே தோன்றும் என்னை...
வழி நெடுக விரிந்தோடும் அழகுகளை
அள்ளித் தந்தாலும் கூட
உங்களின் பாதைகளை நான்
விரும்பியே வெறுக்கிறேன் ....
அவை நேர்மையற்றதாகவும்
குறுக்கு வழியாகவும் இருக்கும் பட்சத்தில் ....
தனித்த தீவொன்று
தன் மர்மங்களையும் அமானுஷங்களையும்
அடைகாப்பது போல் -- நானும்...
தயவு செய்து
என்னை ஒரு சீனிமிட்டாய் வியாரியாக்க
ஒரு போதும் முயலாதீர்கள்...
இனிக்கின்ற கசப்பால்
நோய் விரட்டும் வைத்தியனும் அல்ல நான்!
அதைத் தெரிந்தறியாக் குழந்தையும் இல்லை, நீங்களும்....
உங்களின் பொல்லாக் கருத்துகளை
உரத்துச் சொல்ல என்னை
இன்னொரு ஒலிபெருக்கியாக்கும்
உங்களின் பேராசைகளை என்னென்பது?
எத்தனையோ இன்னல்களிலும்
கசப்பென்பதை அதன் கசப்பிற்காவே
கசப்பென்றே உணர்ந்துண்டவன் நான்....
வஞ்சமில்லா எண்ணம் கொண்ட ஒருவனின்
கண்சிமிட்டலில் துகளாகிவிடத் துடிக்கும்
என் இந்த முரட்டு முகமூடியுடனே ---
இருந்துவிட்டுப் போகிறேன்;
இன்னும் சொச்ச காலமும்
இப்படியே!
என் வாயில்கள்
திறந்தே தான் இருக்கின்றன;
வெளியேறுவோரின் எண்ணிக்கை
வெகுவாக இருப்பதற்கு
'என் உண்மை' ஒன்றே தான் காரணமெனில் --
நட்புடன்,
இன்னொரு வாயிலையும் கூட அமைத்துத் தருகிறேன் --
நீங்கள் சற்றே தாராளமாக வெளியேற....
நன்றி:
கூகுள் படங்கள்.





No comments:
Post a Comment