கட்டவிழ்த்து விடப்பட்ட
மாடுகள்
அத்தனையும் ஒருசேர
வீதிக்கு வந்து நிற்கின்றன......
நெடுஞ்சாலைகளில் தவமுனிகள் போல்....
இயல்பான முரணாக.....
குத்திட்டு நிற்கும்
ஒவ்வொரு ரோமத்திலும் ஒளிந்திருக்கும்
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் .....
வாகன இரைச்சல்களை சட்டை செய்யாமல்....
அசை போட்டபடி
திசைகள் தோறும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி.....
மார்கழி மகிழ்ந்தேத்தும் கண்ணனும்
பரமண்டலங்களில் சஞ்சரிக்கும் தேவகுமாரனும்
வருவதற்கான சாத்தியங்களைச்
சாலைகள் தோறும் தேடியலைந்தபடி.....
நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்.
மாடுகள்
அத்தனையும் ஒருசேர
வீதிக்கு வந்து நிற்கின்றன......
நெடுஞ்சாலைகளில் தவமுனிகள் போல்....
இயல்பான முரணாக.....
குத்திட்டு நிற்கும்
ஒவ்வொரு ரோமத்திலும் ஒளிந்திருக்கும்
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் .....
வாகன இரைச்சல்களை சட்டை செய்யாமல்....
அசை போட்டபடி
திசைகள் தோறும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி.....
மார்கழி மகிழ்ந்தேத்தும் கண்ணனும்
பரமண்டலங்களில் சஞ்சரிக்கும் தேவகுமாரனும்
வருவதற்கான சாத்தியங்களைச்
சாலைகள் தோறும் தேடியலைந்தபடி.....
நன்றி: முகநூல்
நன்றி: கூகுள் படங்கள்.

No comments:
Post a Comment