Tuesday, 25 November 2014

தொடுவானத்தில் ஒரு தேடல்...

எதுவுமே சரியில்லை..... 



எங்கிருந்தோ 
வந்து தழுவுகிறது ஒரு தென்றல்..... 

யாரிடமும் அனுமதி பெறவில்லை.... 
என்றாலும் நுழைகிறது 
மண் வாசம்.... 

"நமக்கில்லை மழை... 
மேகம் தெக்கால போகுது...!" 
நெற்றியில் உள்ளங்கை கூரை விரித்து, 
கண் சுருக்கி உதடு பிதுக்கும் அந்தப் பெரியவரைப் பார்க்கிறேன்....

இலக்கின்றி
இன்னமும் தொடுவானத்தில்
தன் எதிர்காலம் தேடிக்கொண்டிருந்தார் அவர்!

எந்த குரு பெயர்ந்தால் என்ன?
எந்த கேது நகர்ந்தால் என்ன?
சுக்கிரன் சக்கரமாய் சுழன்றால் என்ன?

இந்திய விவசாயிக்கு
எப்போதுமே
சரியாய் இருப்பதில்லை ---
தசாபுத்திகள்....
வானிலை அறிக்கைகள்...
வந்தமரும் அரசுகள்....
வளர்ந்து கெட்ட பிள்ளைகள் ....
என்று எல்லாமுமே...


நன்றி: முகநூல் 
நன்றி: கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment