புயலுக்குப் பிறகான சென்னையை -- அது மீண்டெழுவதை நாம் பார்த்தபடியே தான் இருக்கிறோம். “பட்டணம் போயிப் பொழைச்சிக்கோ” என்று சொல்லி, சென்னைக்குப் பிள்ளையை அனுப்பிய லெட்சோபலெட்சம் தகப்பன்களுள் ஒருவர் அவர். நேற்று அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சட்டம் பயின்றவர். ஆனாலும் முழுநேர விவசாயி.. பல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே விடாத தொலைபேசி அழைப்பு. எழுபதைத் தாண்டியவர். தனியாக வேறு வந்திருந்தார். எனவே, “பரவால்ல, பேசிடுங்க!” என்றேன்.
மிக உரத்த குரலில், சற்றேறக்குறைய ஒரு வாக்குவாதம்.. மறுமுனையில் ஒரு ஆண். தீராத புலம்பல்கள்.. கோப வார்த்தைகள். லாப நஷ்டப் புள்ளி விபரங்கள்.. சேதம்.. லெட்சங்கள்… பற்றாக்குறைகள்… பேச்சு வளர்ந்து முற்றி, “அதுக்கென்ன பண்றது? ஒரெடத்துல அள்ளுனத இன்னொரு இடத்துல கொட்டித் தான ஆகணும்?””
ஒரு கனத்த மௌனத்துக்குப் பின், மறுமுனையில் அந்தக் குரல், “இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”
“போ.. போயி தேடு! அவன் குடும்பத்துக்கும் தானே இந்தப் புயல் அடிச்சிருக்கும்? அவன் இல்லாத அந்தக் குடும்பத்தையும் பாரு! என்ன தொழில், என்ன லாபம்னு கூடக் கேட்காம கடைசிப் பொட்டுத் தங்கம் வரைக்கும் வித்துக் கொடுத்தது – அவன் சம்சாரம்னு சொன்னியே, அதோட நிலமை இன்னிக்கு என்ன ஏதுன்னு பார்த்து நீ சரி பண்ணு… செஞ்சிட்டு சொல்லு! உன் வீட்டை சரி பண்றதுக்கு நான் இங்கேயிருந்து பணத்தைப் போட்டு விடுறேன்!” –தீர்மானமாகவே சொன்னார்!

மறுமுனை இன்னும் சூடாகி ஏதோ கத்த, “லே… பொம்பளைத் துரோகம் பங்காளித் துரோகம்னு பேசுற நம்ம நாட்டு கதைகள்ல கூட ஸ்னேகிதத் துரோகம் கிடையாதுடா! மடப்பயலே! “அவன் செத்தோன்ன, மூனு லெட்ச ரூவாய நீ ஏமாத்துனே.. இன்னிக்கு ரெண்டு மடங்கா நஷ்டம்னு சொல்ற.. அந்தப் பொண்ணுக்கு ஓரெழவும் புரியல… ஒண்ணு தெரிஞ்சுக்க… நான்னு இல்ல.. எந்தத் தேங்காமூடி வக்கீலா இருந்தாக்கூட போதும்! – உன்னோட வில்லங்கத்தைப் புட்டு வைக்கிறதுக்கு! மரியாதையைக் காப்பாத்திக்க… பேசுறான் பேச்சு!..” – உடம்பதிரக் கத்திவிட்டு செல்பேசியையை பைக்குள் வைத்துக் கொண்டார்!
“மன்னிக்கணும் ம்மா! உங்க நேரத்தை வீணாக்கிட்டேன்” என்று தாழ்மையாகச் சொல்லி, சிகிச்சை முடிந்து பத்து நிமிடத்தில் விடைபெற்றுச் சென்றார்.
அவரவர் காரணங்கள் அவரவர்க்கு! அவரவர் நியாயங்களும் அப்படியே! ஆனாலும் மிகத் துல்லியமான ஒரு கணக்கு, நுட்பமான ஒரு தராசு,
எங்கும் எதிலும் ஊடுபாவும் ஓர் அரசியல், நேர்த்தியான அனுபவப் பாடங்கள்… சங்கிலித் தொடர் போல – சம்பவங்களின் தொகுப்புகள்.. படிப்பினைகள்.. நிமித்தங்கள், முடிந்ததான எல்லாவற்றையும் முனைந்து தொடங்கும் கேயாஸ் தியரியின் புதிய புள்ளிகள்..
குறைவில்லா சுவாரஸ்யங்கள்...

உண்மையில், ஆண்டவனை அரிசியில் பேரெழுதுகிறவராக மட்டுமே சிறுமைப் படுத்தும் நம் சிறுபிள்ளைத்தனத்தை என்ன செய்வது?
No comments:
Post a Comment