Monday, 1 December 2014

கேட்கச் செவியுள்ளவன் கதி!

சப்தங்களாலேயே
சந்ததிகளை வளர்க்கிறோமே

என்கிற சங்கடம்
தினம் தினம் தின்கிறது.


மௌனம்
ஆடையைப் போன்று
உடனடித் தேவையாகிறது.



இறங்கும் இருட்டின் இடையிலும்
மூடிய கதவுகளின் இடுக்கிலும் கூடக்
கேட்டபடியே தான் இருக்கின்றன...
அமைதியை அலைக்கழிக்கும் குரல்கள்...



விட்டு விட்டு ஒலித்து
நீக்கமற நிரம்பிக் கிடக்கின்றன
நிசப்தத்தைக் கொல்லும் எல்லாமும்....



சின்னதும் பெரியதுமான
விஞ்ஞான ராட்சதர்கள்,
அழுகையையும்                                                
ஆரவாரத்தையும்
அள்ளித் தெளித்து
அழிச்சாட்டியம் செய்கையில்
எதிர்பார்த்தபடி இனிதே நடக்கிறது
இன்னொரு 'மௌனப் படுகொலை'!



கடவுளே!
உனக்கும் சேர்த்தே வேண்டிக் கொள்கிறேன்....
சப்தம் தொலைத்த
ஒரு மௌனப் பிராந்தியத்தில்
நம் வாழ்க்கை
கொஞ்சமேனும் பயணப்பட வேண்டும் ---
நாளையாவது!





நன்றி : கூகுள் படங்கள். 

No comments:

Post a Comment