யாரையோ அழைக்க நினைத்து
எடுத்த அலைப்பேசி
ஒளியடங்கித் தன் படம் சுருக்கிக் கொண்டது!
மறதி!
எழுத நினைக்கும் கவிதைக்குள்
வந்தமர சண்டித்தனம் செய்யும் சொற்களை
இழுத்துப் பிடித்து
நாற்காலியோடு கட்டிபோட நேரமாகலாம்.
மல்லுக்கட்டாதே!
தோட்டத்துச் செடிகளுக்கு
நீர் வார்க்கும் வேளையில் தானா
பிள்ளைகளின் --
காணாமல் போன காலுறைகள்
நினைவுக்கு வர வேண்டும்??
கண்களைக் குளமாக்கி
உயிர் வரை ஊடுருவும்
அந்த இசையோடு இணைவதற்கு
நேரம் போதவில்லை;
அடுக்களையும் பங்கு கேட்பதால்....
கண்மூடி மனம் ஒருமித்து
தியானிக்கும் அச்சிறுபொழுதில்
முண்டியடித்து ஏக்கமாய்
ஏன் முகம் பார்த்து நிற்பது
ஞான திருஷ்டியில் தெரிகிறது!
ஏக்கப் பெருமூச்சோடு,
ஏன் இப்படி? என்ற கேள்வியோடு,
விடைகளைப் பற்றிய அக்கறையின்றி,
அசதியாய்க் கண்மூடும் அந்த வேளையில்
ஆருதலளிப்பதென்னவோ
கவிதையாய் வளம் வரும் கனவுகள் மட்டுமே!
நன்றி: முக நூல்
நன்றி: கூகுள் படங்கள்.
எடுத்த அலைப்பேசி
ஒளியடங்கித் தன் படம் சுருக்கிக் கொண்டது!
மறதி!

எழுத நினைக்கும் கவிதைக்குள்
வந்தமர சண்டித்தனம் செய்யும் சொற்களை
இழுத்துப் பிடித்து
நாற்காலியோடு கட்டிபோட நேரமாகலாம்.
மல்லுக்கட்டாதே!
தோட்டத்துச் செடிகளுக்கு
நீர் வார்க்கும் வேளையில் தானா
பிள்ளைகளின் --
காணாமல் போன காலுறைகள்
நினைவுக்கு வர வேண்டும்??

கண்களைக் குளமாக்கி
உயிர் வரை ஊடுருவும்
அந்த இசையோடு இணைவதற்கு
நேரம் போதவில்லை;
அடுக்களையும் பங்கு கேட்பதால்....
கண்மூடி மனம் ஒருமித்து
தியானிக்கும் அச்சிறுபொழுதில்
முண்டியடித்து ஏக்கமாய்
ஏன் முகம் பார்த்து நிற்பது
ஞான திருஷ்டியில் தெரிகிறது!
ஏக்கப் பெருமூச்சோடு,
ஏன் இப்படி? என்ற கேள்வியோடு,
விடைகளைப் பற்றிய அக்கறையின்றி,
அசதியாய்க் கண்மூடும் அந்த வேளையில்
ஆருதலளிப்பதென்னவோ
கவிதையாய் வளம் வரும் கனவுகள் மட்டுமே!
நன்றி: முக நூல்
நன்றி: கூகுள் படங்கள்.
No comments:
Post a Comment